உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது.
கொய்யாபழத்தைக் கொண்டு உடல் எடையை குறைக்கும் முறையை இங்கே காணலாம்.
கொய்யாவில் இருக்கும் பண்புகள் உடலின் கூடுதல் எடையை குறைக்க உதவுகின்றன.
கொய்யாவில் அதிகம் இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரதம் காரணமாக இது ஜீரணிக்க எளிதாக இருக்கிறது. இதை உட்கொள்வதால் நிரம்பிய உணர்வு இருக்கும்.
கொய்யாப்பழத்தை ஸ்மூத்தியாக செய்து குடிப்பதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.
கொய்யாவுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து சட்னியாக உட்கொண்டால், செரிமானம் சீராகும், கூடுதல் கொழுப்பு குறையும்.
கொய்யா மற்றும் புதினாவை சேர்த்து அரைத்து சாறு செய்து உட்கொண்டால், தொப்பை கொழுப்பு குறையும், வளர்சிதை மாற்றம் மேம்படும்.
கொய்யாவில் உள்ள பண்புகள் காரணமாக உடலில் கூடுதல் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை