மாட்டிறைச்சி, தசை மற்றும் கொழுப்பு உயிரணுக்களால் தயாரிக்கப்படும் அசைவ அரிசியில் வழக்கமான அரிசியை விட 8 சதவீதம் அதிக புரதம் இருக்கிறது.
தென் கொரியாவில் உள்ள யோன்செய் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவின் புதிய கண்டுபிடிப்பான அசைவ அரிசி, மிகவும் மலிவு விலையில் புரதத் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் நம்புகின்றனர்
வழக்கமான அரிசியை விட சற்று உறுதியாக இருக்கும் கலப்பின அரிசி அதிக புரதம் கொண்டது
பஞ்சம், இராணுவத்திற்கான உணவு அல்லது விண்வெளி வீரர்களுக்கான உணவுக்கு உகந்ததாக அசைவ அரிசி இருக்கும்
ஆய்வகத்தில் வளர்க்கப்படும் அசைவ அரிசியில் வழக்கமான அரிசி அல்லது வழக்கமான மாட்டிறைச்சியை விட அதிக புரதம் உள்ளது என்பதும், அசைவ அரிசியின் தயாரிப்பு முறையும் வழக்கமான உணவை விட தூய்மையானது என்பதும் குறிப்பிடத்தக்கது
நமக்குத் தேவையான புரதத்தை கால்நடைகளிடமிருந்து வழக்கமாக பெறுகிறோம், ஆனால் கால்நடைகளை உற்பத்தி செய்ய, அதிக அளவு வளங்களையும் தண்ணீரையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்பதும், சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்களும் கால்நடைகளின் ஊட்டச்சத்தும் சேர்ந்ததாக அசைவ அரிசி இருக்கும்
கலப்பின அரிசி, புரதத்தின் சிறந்த ஆதாரமாக மட்டுமல்ல, "தானிய அடிப்படையிலான கலப்பின உணவு" என்பதற்கான வாய்ப்பாகவும் இருக்கும்
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடபபட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது