கன்னம் மற்றும் தாடைக்கு அருகில் கொழுப்பு அதிகமாகும் போது ‘இரட்டை கன்னம்’ உண்டாகி முக அழகைக் கெடுக்கும்.
சில வாழ்க்கை முறை மாற்றங்களையும், எளிய பயிற்சிகளையும் கடைபிடிப்பதன் மூலம் இரட்டை கன்ன கொழுப்பை கரைத்து வசீகரமான முக அழகை தக்க வைத்துக்கொள்ளலாம்.
கன்னத்தின் இரு பகுதிகளையும் உள் நோக்கி குவித்து மீன் போன்று வாயை வைத்துக் கொள்வது, வாயில் எதுவும் இல்லாமலே, சாப்பிடுவது போல் மெல்லுவது ஆகியவை பலன் கொடுக்கும்.
முகத்திற்கான மசாஜ் மூலம் தசைகள் வலுவாகி தாடை அழகான வடிவம் பெறுவதுடன், முக சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து பொலிவு பெறும்.
குறைந்த காலோரி மற்றும் அதிக நார் சத்து கொண்ட உணவுகளை டயட்டில் சேர்ப்பது அவசியம். இவை கொழுப்பை கரைக்க உதவும்.
அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள நீர் சத்து குறையாமல் இருப்பதோடு, சரும ஆரோக்கியத்திற்கு நீர்சத்து மிக அவசியம்
தூக்கமின்மையால்,கார்டிசோலின் ஹார்மோன் அதிகரிக்கிறது. இதனால் உடல், முகத்தில் கொழுப்பு சேரும். நல்ல தூக்கத்தினால் உடலில் நீர் தேங்காமல் இருக்கும்.