இன்றைய உலகில் நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்,
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகள் குடிக்கக்கூடிய சில சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொய்யாவில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதன் சாறை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
வெறும் வயிற்றில் இதை தினமும் குடித்து வந்தால், சர்க்கரை அளவு வேகமாக குறையும்.
நெல்லிக்காய் சாறை நீரிழிவு நோயாளிகள் தினம் வெறும் வயிற்றில் குடிக்கலாம். வைட்டமின் சி உள்ள இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
காற்றாழை சாறு இன்சுலின் செயல்படுத்துதலை ஊக்குவித்து குளூக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்கும். எனினும், இதை குறைவாக உட்கொள்வது நல்லது.
இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதன் நீரை குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதுடன் உடல் எடையும் குறையும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை