கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் மாரடைப்பு, இதய கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில தினசரி எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு ஓட்ஸ் மிக நல்ல காலை உணவாக கருதப்படுகின்றது. இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ராலை செரிக்க வைத்து இரத்தத்தில் சேராமல் பார்த்துக்கொள்கிறது.
பழுப்பு அரிசி, கினோவா, தினை வகைகள் போன்ற முழு தானியங்களை கொலஸ்ட்ரால் நோயாளிகள் உட்கொள்ளலாம். இவை எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கள் மற்றும் பழங்கள் கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய அளவில் உதவும். ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, பச்சை காய்கறிகள் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்களும், ஆளி விதைகள், சியா விதைகள் போன்ற விதைகளும் கெட்ட கொழுப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
சால்மன் போன்ற மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் இன்னும் பல ஊட்டச்சத்துகளும் உள்ளன. இவை கொழுப்பை குறைத்து இதய நோய்களுக்கான ஆபத்தை குறைக்கின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.