அலாரம் அடித்தவுடன் எந்திரிக்காமல் தொடர்ந்து தூங்குவது சோர்வு, மன குழப்பத்திற்கு வழிவகுக்கும். உடனடியாக எந்திரிக்க வேண்டும்.
காலையில் எழுந்ததும் மொபைலை உடனடியாகப் பார்ப்பது மிகவும் தவறு. அதற்கு பதில் நல்ல விஷயங்களை முதலில் செய்யுங்கள்.
காலை உணவை தவிர்ப்பது மிகவும் தவறு. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் இல்லாமல் போகிறது.
காலையில் அவசர அவசரமாக வேலை செய்வது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அதிகரிக்கும். எனவே முன்பே எழுந்து வேலையை முடிக்க வேண்டும்.
காலையில் அதிகமான பணிகளை திட்டமிடுவது தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்குகிறது. எனவே பொறுமையாக திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
காலை உடற்பயிற்சியை தவிர்ப்பது மந்தமான மன நிலைக்கு வழிவகுக்கும். சிறிது உடலுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
எதிர்மறை எண்ணங்களில் நுழையாமல், நேர்மறையான திட்டங்களை பற்றி யோசிக்க வேண்டும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.