PF உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. EPFO ஓய்வூதியத் திட்டத்தின் விதிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன,
இபிஎஃப்ஓ ஓய்வூதியத் திட்ட விதிகளில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்தார்.
இதன் கீழ், இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) PF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் மொத்தத் தொகையையும் ஓய்வூதியமாக மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்குவதற்கான வாய்ப்பை பற்றி ஆராயப்பட்டு வருகின்றது.
ஒரு ஊழியர் தனது இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்பட்ட தொகை முழுவதையும் ஓய்வூதிய நிதியாக மாற்ற வேண்டும் என்று விரும்பினால் இப்படிப்பட்ட வசதி அவருக்கு உதவும்.
இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) இந்த வசதியை அளிக்க இதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கூடிய விரைவில், இதற்கான விதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது.
EPFO இன் கீழ், ஊழியர் மற்றும் நிறுவனம் என இரு தரப்பினரும் மாதா மாதம் PF கணக்கில் 12% தொகையை பங்களிக்கிறார்கள். நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திலும் (EPS), மீதமுள்ள 3.67% ஒவ்வொரு EPF கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகிறது.
தற்போது ஓய்வூதியத்துக்கான அடிப்படை சம்பள வரம்பு 15,000 ஆக உள்ளது. இந்த சம்பள உச்ச வரம்பை (Wage Ceiling Hike) அதிகரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது.
EPFO போர்ட்டலை வங்கி இணையதளம் போல மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இன்னும் ஆறு மாதங்களில் இதில் அதிக முன்னேற்றம் காணப்படும்.