உணவே மருந்து என்பதற்கு உரிய உதாரணமாக பூண்டு சொல்லப்படுகிறது. இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பூண்டு உணவின் சுவையை கூட்டவும் பயன்படுத்தப்படும் அருமருந்து ஆகும்
எப்போது பூண்டுக்கு நோ சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொண்டு பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு பூண்டு நன்மையை மட்டுமே செய்யும்
வைட்டமின் பி1, கால்சியம், தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உட்பட பல சத்துக்கள் பூண்டில் உள்ளதால், இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மருத்துவ குணங்கள் மட்டுமல்ல, உணவுக்கு சுவையூட்டும் ஒரு மசாலாப் பொருளாகவும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. பச்சை பூண்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது
பூண்டில் சல்பர் போன்ற சேர்மங்கள் உள்ளன, இது வாயு உருவாவதற்கு காரணமாகிறது... எனவே வயிற்றுப்போக்கு பிரச்சனையை அதிகரிக்கலாம்.
இரத்தத்தின் நச்சுத்தன்மையை குறைப்பதில் பூண்டின் பங்கு மிக முக்கியமானது. பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது, இது கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்
இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் உள்ளவர்களுக்கு, அதிகமாக பூண்டு சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். இது, உங்கள் உணவுக்குழாயில் மீண்டும் செல்லும் போது, நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படும்
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது