ஆரஞ்சு, வைட்டமின் சி,புரதம், நார்ச்சத்துக்கள், போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் என சத்துக்கள் நிரம்பிய ஆரோக்கிய புதையல்.
விந்தணுக்களை அதிகரிக்கும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. இதில் உள்ள பொலேட் விந்தணுக்களின் தரத்தை ஏற்படுத்தி மலட்டுத்தன்மையை நீக்குகிறது.
ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற உதவும் ஆரஞ்சு பழம் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனால் இதய நோய்கள் ஆபத்து பெருமளவு குறையும்.
ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக ஃபிளாவனாய்டுகள், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி நினைவாற்றலை பெருக்கும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன் ஆரஞ்சு பழத்தை ஜூஸாக குடித்து வருவது நல்லது.
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழ சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டால், வாய் துர்நாற்றம், ஈறுகளில் வீக்கம், சொத்தை பல் ஆகியவை கட்டுப்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது