வைட்டமின் பி12 சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் டிஎன்ஏவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
இந்தியாவில் 70 சதவீதம் பேர் வைட்டமின் பி 12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வைட்டமின் பி 12 குறைபாட்டை எடுத்துக்காட்டும் சில அறிகுறிகளும் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்துகொண்டு அவை தோன்றினால் உடனடியான மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.
ஒருவர் அடிக்கடி சோர்வாகவும் (Fatigue) பலவீனமாகவும் உணர்ந்தால், அவரது உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம். வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக, ஆக்ஸிஜன் வழங்கல் குறையத் தொடங்குகிறது.
நினைவாற்றல் பலவீனமடையத் தொடங்கினால் அல்லது எதையும் நினைவில் வைத்துக் கொள்ள உங்கள் மூளைக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தால், உங்கள் உடலில் பி 12 இன் குறைபாடு இருக்கலாம்.
பி 12 இன் குறைபாடு காரணமாக, நரம்புகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. நரம்புகள் பலவீனமடையத் தொடங்கும் போது, கைகள் மற்றும் கால்களில் தொடர்ந்து கூச்ச உணர்வு ஏற்படுகிறது, உணர்வு குறையத் தொடங்குகிறது.
வைட்டமின் பி 12 குறைபாட்டால், கண் பார்வை மங்கலாகத் தொடங்கும். மேலும் உங்கள் பார்வையும் குறையத் தொடங்கும்.
வாயில் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பித்தால், இதுவும் வைட்டமின் பி12 குறைபாட்டின் முக்கிய அறிகுறியாகும்.