இன்றைய காலகட்டத்தில் வாழும் இளைஞர்கள் பெரும்பாலும் நிதி தேவைக்காக கிரெடிட் கார்டுகள் அல்லது தனிநபர் கடன்களையே நாடும் போக்கு உள்ளது.
மருத்துவ அவசர நிலை கல்வி திருமணம் போன்ற விஷயங்களுக்கு நிதி தேவைப்பட்டால் தனிநபர் கடன் வாங்கலாம். பொதுவாக தனி நபர் கடன்கள் என்பது ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்திற்கு வழங்கப்படுகிறது
கிரெடிட் கார்டுகளில் அடிப்படையில் கடன் வாங்குவதும், அதில் அவசர தேவைக்கான பொருட்களை வாங்குவதும் எளிது. ஆனால், சமயத்தில் கடனை அடைக்காவிட்டால், வட்டி பெருமளவில் கட்ட வேண்டியிருக்கும்
உங்களுக்கு அவசர தேவையைப் பொறுத்து இரண்டில் ஒன்றை வாங்க முடிவு செய்ய வேண்டும். குடும்பத்தினருக்காக உடனடியாக ஒரு விமான டிக்கெட் ஒன்றை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அப்போது நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்.
அதிக அளவிற்கு பணம் தேவைப்படும்போது, தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது சரியான முடிவாக இருக்கும். குறைவான அளவில் அதாவது சில ஆயிரங்களில் உங்கள் தேவை நிறைவேறிவிடும் என்றால் கிரெடிட் கார்டினை பயன்படுத்துவது சிறந்தது.
நிச்சயமாக தனிநபர் கடனுக்கான வட்டி என்பது, கிரெடிட் கார்ட் பயன்படுத்தும்போது சுமத்தப்படும் வட்டி விகிதத்தை விட குறைவானது
தனிநபர் கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கடன் எளிதாக, ஒப்பிட்டு அளவில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும்.