உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தாலும், மலச்சிக்கல் ஏற்படும். எனவே, அதிக தண்ணீரை அருந்துங்கள்.
தினமும் 30 நிமிடங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவந்தால், மலச்சிக்கல் ஏற்படாது.
தக்காளி ஜூஸ், கொத்தமல்லி ஜூஸ் ஆகியவை வயிறை சீராக வைத்திருக்க உதவும்.
ஃபைபர் உள்ள உணவுகளை குறைவாக சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் ஏற்படும். எனவே, ஆப்பிள், நெல்லிக்காய், பப்பாளி, வாழைப்பழம் போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
புரோபயாடிக் உணவுகளான இட்லி, பன்னீர் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.
அத்தி, ஆளிவிதை ஆகியவை சாப்பிடுவதன் மூலம் இயற்கையாக மலச்சிக்கலுக்கு தீர்வு உண்டாகும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் ஃபைபர் குறைவாகவே இருக்கும் என்பதால் செரிமான கடினமாகும். இதனால், மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பதிகம்.