தர்பூசணி, பெர்ரி, அன்னாசி, பீச் போன்ற பழ வகைகளை சாப்பிடலாம்.
ஹெவியான உணவுகளை சாப்பிடாமல் சாலடுகள் போன்ற மிதமான உணவுகளை சாப்பிடலாம்.
காய்கறிகள் அல்லது பழங்கள் கலந்த ஸ்மூத்திகளை சாப்பிடலாம்.
கோடை காலத்தில் நீரேற்றமாக இருப்பது அவசியமென்பதால் போதுமான நீர் குடிக்க வேண்டும்.
துளசி, புதினா, கொத்தமல்லி போன்ற மூலிகை பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
காய்கறி, மீன், இறைச்சிகளை க்ரில் செய்து சாப்பிடலாம்.
பழ ஸ்மூத்திகள், சாலட், பெர்ரியுடன் தயிர் போன்ற மிதமான உணவை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.
பழங்கள் சேர்க்கப்பட்ட ஐஸ், குறைந்த சர்க்கரை சேர்க்கப்பட்ட ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிடலாம்.