நமது சமையலறையில் வழக்கமாக பயன்படுத்தப்படும் பொருளான இஞ்சியில் ஒன்றல்ல, இரண்டல்ல பல ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதோடு மருத்துவ குணங்களும் உள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர் நிபுணர்கள். நாள் ஒன்றுக்கு 4 கிராம் இஞ்சியை சாப்பிட்டு வந்தால், இன்சுலின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும்
இதய நோய் உள்ளவர்களுக்கும் இஞ்சி ஒரு அரு மருந்தாகும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதிலும் இஞ்சி மிகவும் நன்மை பயக்கும். மாரடைப்பு அபாயமும் இதன் மூலம் குறையும்.
இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது.
இஞ்சி, கர்ப்பப்பை புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமல்லாமல், புற்றுநோய் நோயாளிகளுக்கு கீமோதெரப்பி சிகிச்சைக்குப்பின் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. மார்பகப் புற்றுநோய் செல்கள் வளர்வது மட்டுப்படுகிறது.
மூச்சுத் திணறல் மற்றும் மூச்சுக் குழாய் அழற்சிகளை ஆற்றும் குணம் கொண்ட இஞ்சி, நுரையீரலை வலுப்படுத்துகிறது. காச நோய் உள்ளவர்களுக்கு உகந்த மருந்து என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
மைக்ரேன் தலைவலியை போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. ஒற்றைத் தலைவலி தீர பச்சையாக இஞ்சியை உட்கொள்வதன் மூலம், அதிக பலனை பெறுவீர்கள்.
வயிற்று வலி, வயிற்று பிடிப்பு போன பிரச்சனைகள் உள்ளவர்கள், பச்சையாக இஞ்சியை சாப்பிட, வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.
ஜலதோஷத்தினால் உண்டாகும் சைனஸ் போன்ற அடைப்புகளிலிருந்தும், நுண்ணிய பல ரத்த நாளங்களையும் தூய்மைப்படுத்துகிறது இஞ்சி.
இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் மூப்பு மற்றும் அல்சைமெர் போன்ற வியாதிகளிலிருந்து காத்து, டிஎன் ஏ சிதைவில் இருந்து பாதுகாக்கிறது.
5ஆம் நூற்றாண்டில் ஸ்கர்வி எனப்படும் விட்டமின் சி குறைபாட்டினால் உண்டாகும் நோய்க்கு இஞ்சியை மருந்தாக சீனர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.