வெந்நீர் குடிப்பதால் உடலில் உள்ள பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. எனினும் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து.
வெந்நீரைக் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் என்றாலும், அதிக அளவு சூடான நீரை குடிப்பதன் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படும்.
அதிகப்படியான சூடான நீரைக் குடிப்பதால் மூளை செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தலாம், மேலும் இது மூளை தொடர்பான பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.
இரவில் வெந்நீர் குடிப்பதால் சிறுநீர் பெருகும் என்று கூறப்படுகிறது. இது உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம்.
அளவிற்கு அதிகமான வெந்நீரை குடிப்பது செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது மூளையில் மண்டை ஓட்டை அழுத்தி, தலைவலி மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அளவிற்கு அதிகமான வெந்நீர் உணவுக்குழாய் மற்றும் செரிமான அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.