வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், கொழுப்புச் சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்களை அதிகம் கொண்ட ஊட்டச்சத்துப் பழம்
சீத்தாப்பழம் இனிப்பு சுவையுடன் இருந்தாலும், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் சர்க்கரை அளவும் கூடாது
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களுடன் பல்வேறு சத்துக்களும் நிறைந்துள்ளது சீத்தாப்பழம்
தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராக்கும் தன்மையைக் கொண்ட சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவத மூலம் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்
சீத்தாப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தாலும், இதிலுள்ள நார்ச்சத்தும் பசியாற்றும் குணமும், அடிக்கடி பசி எடுக்காமல் பாதுகாக்கும்
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது, எலும்புகளின் பலத்தை அதிகரிக்கும் அருமையான பழம்
சீத்தாப்பழத்தின் விதைகளை பொடியாக்கி அத்துடன் பாசிப்பயிறு மாவு கலந்து தேய்த்து குளித்து வந்தால் மேனி பளபளப்பு கூடும்
செரிமானத்திற்கு அருமையானது. மேலும் பித்தம், வாந்தி பேதி, தலைசுற்றல் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை