தினமும் 4 வால்நட்ஸ் காலை, மாலை சாப்பிட்டு வருவதால் மூட்டுவலிப் பிரச்சனை சரிசெய்வதை உணரலாம்.
அதிக நேரம் நிற்பவர்கள் மற்றும் நடப்பவர்கள் தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் எலும்பை வலுவாக வைத்திருக்கலாம்.
வைட்டமின் ஈ, பி6, புரதம், இரும்பு, மெக்னீசியம், செலினியம், கால்சியம், அமிலம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலிக் அமிலம், தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்குப் பலன் கொடுக்கும்.
வால்நட்ஸில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால் கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கங்கள் மற்றும் வலிகள் படிப்படியாகக் குறைவதை அறியமுடியும்.
சிறுவயதிலிருந்து வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் எதிர்காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையை வராமல் தடுக்க உதவும்.
வால்நட்ஸில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் உள்ளன. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
வால்நட்ஸ் விலை மதிப்பைவிட நன்மை பல மடங்கு கிடைக்கும். வால்நட்ஸ் பொதுவாக மக்கள் வாங்குவது குறைவு. சிலருக்கு ருசி பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இது நன்மை அள்ளிதரும் அற்புத நட்ஸ்.