உறவுகள் நிலைத்து நிற்க இதை செய்து பாருங்கள் !!
இன்றையக் காலத்தில் உறவுகளிடம் பழகுவது குறைவாகிவிட்டது. இதனால் பலவித மனக்கசப்புகள் உறவுகளிடையே நிகழ்கிறது. தினமும் வேலை மற்றும் உறவு இரண்டிற்கும் நேரத்தை ஒதுக்கப் பாருங்கள்.
ஒரு நேரத்தில் ஒரு வேலை என்ற நோக்கத்தில் இருக்க வேண்டும். ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்தால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படும்.
கவனக் குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் உறவுகளிடையே தங்கள் மீது என்ன தவறு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
உறவு என்பது நாம் வைத்திருக்கும் பொக்கிஷம். இதைக் கவனமாகக் கையாள வேண்டும். மற்றவர்களின் கருத்துகளைப் புரிந்து அதில் எது சரி என்பதை ஆராய வேண்டும்.
24 மணி நேரமும் வேலை இருக்கும். அதை எப்படிப் பக்குவமாகக் கடந்து செல்ல வேண்டும் என்பதைச் சிறிது நேரம் கண்களை மூடி யோசிக்க வேண்டும்.
வேலை நாட்கள் அதிகம். இடைவெளி குறைவு. விடுமுறை நாட்களில் உங்களால் முடிந்த அளவுக்கு உறவுகளோடு வெளிப்பயணம் (அ) சுற்றுலா மேற்கொள்ளுதல் நல்லது.
தினசரி நேரத் திட்டமிடல் என்பது நம்முடைய நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்க உதவும்.