உணவில் சுவையை சேர்ப்பதில் மட்டுமல்ல, உணவு கெட்டுப் போகாமல் பாதுகாப்பதிலும் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதைவிட முக்கியமானது உடலுக்கு உப்புச்சத்து மிகவும் அவசியமானது என்பதே...
ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்ந்தமும் நஞ்சு என்ற பழமொழி உப்புக்கு மிகவும் பொருத்தமானது. உடலில் அளவுக்கு அதிகமான உப்பு சேர்ந்தால், அதுவே நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தைக் கெடுக்கும்
உடலில் உப்பு அதிகமானால், தாகம் அதிகமாக எடுக்கும். இந்த அறிகுறியை தெரிந்துக் கொண்டால் ஆரோக்கியம் குலைவதைத் தவிர்க்கலாம்
உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொண்டால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுவீர்கள், எனவே உப்பை அளவுடன் உண்ணவும்
உடலில் அதிகமாகும் உப்பு, சிறுநீர்க பிரச்சனைகளை ஏற்படுத்தும், இது ஒட்டுமொத்த ஆரோக்கிய சீர்குலைவுக்கு வழிவகுக்கும்
உப்பு சேர்த்த உணவை அதிகமாக சேர்த்துக் கொள்வதால் அஜீரணக் கோளாறுகள் அதிகமாகும்
உப்பு இல்லாமலும் இருக்கக்கூடாது, அதிகமாகவும் ஆகக்கூடாது என்பதை மனதில் வைத்து உப்பை அளவாக பயன்படுத்தினால் ஆரோக்கியம் சீராக இருக்கும்
இந்தச் செய்தி உங்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை.