ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பது நமது பழக்கவழக்கங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. குழந்தைகள் சிறுவயதில் சில விஷயங்களைத் தவிர்த்தால் அவர்கள் எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறையும். அவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்...
காலை உணவை தவிர்ப்பதும், சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் சாப்பிடுவதும் நீரிழிவு நோயை ஏற்படுத்துவதற்கான காரணமாகிறது. எனவே இவற்றை தவிர்க்கவேண்டும்
சோம்பலாக இருப்பது, உடல் இயக்கம் குறைவாக இருப்பது, விளையாட்டில் விருப்பம் இல்லாமல் இருப்பது போன்றவை, நீரிழிவு ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களாக மாறும்
குண்டாக இருப்பது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சர்க்கரை நோய் வருவதற்கும் காரணமாகிறது
வாழ்நாளை குறைக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம், நீரிழிவு நோய்க்கும் அடிப்படை காரணமாக மாறுகிறது
போதுமான உறக்கம் இல்லாததும், உடல்நலக் குறைவுக்கும் நீரிழிவுக்கும் ஆணிவேராக மாறுகிறது
உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதும் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்களில் முக்கியமானதாகிறது
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.