ஒருவர் தனது வணிக முயற்சியில் வெற்றிபெற என்ன தேவை என்ற கேள்வி எழும் போது, ஒரு தனித்துவமான யோசனை மற்றும் சரியான முதலீடு என்பதே அதன் பதிலாக இருக்கும்.
சொந்த தொழில் செய்யும் ஆசை உள்ளது. ஆனால் போதுமான முதலீடு இல்லை என கவலைப்பட வேண்டாம். மிகக் குறைந்த முதலீட்டில் செய்யக் கூடிய லாபம் தரும் சில தொழில்களை அறிந்து கொள்ளலாம்.
ரூ.10,000 முதலீட்டில் தொழில் தொடங்க விரும்புபவர்கள் ஊறுகாய் வியாபாரத்தை தேர்வு செய்யலாம். இந்தத் தொழிலைத் தொடங்க உங்களுக்கு தேவையானது புதிய மூலப்பொருள், சரியான செய்முறை மற்றும் சில பேக்கேஜிங் பொருட்கள் மட்டுமே. விற்பனையை அதிகரிக்க ஒரு நல்ல சந்தைப்படுத்தல் உத்தியை திட்டமிடுங்கள்.
தற்போது பிளாக்கிங் என்பது பலரின் விருப்பமாக மாறிவிட்டது. பிளாக்கிங்கைத் தொடங்க ஒருவர் அதிக முதலீடு செய்வதில்லை. பெரிய பிராண்டுகள் மற்றும் நிறுவனங்கள் கூட வலைப்பதிவாளர்களை பணியமர்த்துகின்றன, அவர்கள் வலைதளங்களுக்கு சுவாரஸ்யமான வீடியோக்கள் மற்றும் உள்ளடக்கங்களை நிர்வகிக்க முடியும்.
யோகா வகுப்புகள் நடத்துவது உங்களுக்கு நிலையான வருவாயைத் தரும். மக்களிடையே யோகா பிரபலமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வீட்டிலோ அல்லது சமூக மையத்திலோ யோகா கற்பிக்க ஒருவர் தங்கள் சொந்த முயற்சியைத் தொடங்கலாம். இந்த வணிகத்திற்கு 10,000 ரூபாய்க்கு குறைவான முதலீடு தேவைப்படுகிறது.
ரூ.10,000க்கு கீழ் தொழில் தொடங்க விரும்புவோருக்கு, டிபன் சேவை சிறந்த தேர்வாக இருக்கும். பெரும்பாலான இந்திய தம்பதிகள் வேலை செய்யும் போது, அவர்கள் நேரமின்மையால் டிபன் சேவை பெறுவது அவர்களது பணியை எளிதாக்கும். ஆரோக்கியமான உணவை உண்பதை உறுதி செய்வதற்காக மக்கள் நல்ல தொகையை செலுத்த தயாராக உள்ளனர்.
வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்க உலகம் தொடர்ந்து போராடுவதால், அவர்கள் வசதியான மற்றும் வீட்டில் இருந்த படியே கற்றுக் கொள்ளும் உடற்பயிற்சி வகுப்புகளைத் தேடுகிறார்கள். இதன் விளைவாக, ஆன்லைன் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளருக்கான தேவை அதிகரித்துள்ளது.