தொந்தி தொப்பை இல்லாத உடல்வாகு வேண்டுமா? இந்த வேலை செய்யுங்க என்று வீட்டில் பெரியவர்கள் சொன்னதை கேட்டிருந்தால் ஒல்லியாக இருந்திருக்கலாம்
உடல் இயக்கம் என்பது நடைபயிற்சி, யோகா போன்றவை மட்டுமல்ல, நமது வேலைகளை நாமே செய்தாலும் ஆரோக்கியமாக இருக்கலாம்
உடல் அழகாக இருக்க வேண்டும் என்றால், தொப்பையும் தொந்தியுமாக இருக்கக்கூடாது
உடல் உழைப்பு அதிகம் இல்லை என்றால், இடுப்பில் சதை போடும், அது அப்படியே தொந்தியாக மாறிவிடுகிறது
இடுப்பில் போடும் சதையை கரைப்பது மிகவும் கடினமான வேலை
வீட்டில் சமையல் வேலையை நாமே பார்க்கும்போது, நடந்தும் உட்கார்ந்தும் வேலை செய்வோம், இதைவிட பெரிய பயிற்சி உண்டா?
வீடு கூட்டி பெருக்கி சுத்தம் செய்யும்போது, வீடும் சுத்தமாகும், வயிற்றில் இருக்கும் கொழுப்பும் கரையும்
வாஷிங் மெஷினில் துணி துவைப்பதை விட கையால் துவைத்தால், உடல் தொப்பையும் குறையும், துணியும் நீண்ட நாள் உழைக்கும்
குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே உடல் கட்டுடலாக மாறும்