புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம் உள்ள கினோவாவின் கிளைசெமிக் குற்யீடு மிக குறைவு. இது சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைப் போல இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.
ஓட்ஸ் சுகர் நோயாளிகளுக்கு ஏற்றதாக கருதப்படுகின்றது. ஓட்ஸ் காலை உணவுக்கு மிகவும் ஏற்றது.
பக்வீட் எனப்படும் நெளிகோதுமையில் க்ளூட்டன் இல்லை. இதில் அதிக அளவில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
வெள்ளை அரிசியை போலல்லாமல் பிரவுன் அரிசியில் அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது செரிமானத்தை சீராக்குவதுடன் நீரிழிவு நோயையும் கட்டுக்குள் வைக்கிறது.
அதிக நார்ச்சத்து உள்ள பார்லி சுகர் லெவலை குறைத்து கட்டுக்குள் வைக்க பெரிய அளவில் உதவுகின்றது.
அமரந்த என்றழைக்கப்படும் தண்டுக்கீரை விதைகளில் புரதசத்து, நார்ச்சத்து, மைக்ரோநியூட்ரியண்டுகள் இருப்பதோடு, இதன் ஜிஐ அளவும் மிகக் குறைவு, இதைக் கொண்டு இரத்த சர்க்கரை அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.