உலகம் முழுவதும் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில சிறந்த சைவ உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கீரை மற்றும் கோஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் ஏராளமான புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பல்வெறு பருப்பு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆன்டிநியூட்ரியண்ட்ஸ் எனப்படும் சேர்மங்கள் உள்ள இவை இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவும்.
முழு தானியங்கள் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. முழு தானிய உணவுகள் கொலஸ்ட்ரால் அளவு, எடை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
கொட்டைகள் மற்றும் விதைகளில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.
இந்த பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி ஆக்சிடெண்டுகள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.