முந்திரியில் கொழுப்புச்சத்து குறைவாகவும் இதயத்திற்கு நன்மை அளிக்கும் ஒலைக் அமிலமும் உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ள ஆளி விதைகளை தினமும் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
வைட்டமின் ஈ, வைட்டமின் பி1, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ள சூரியகாந்தி விதைகளை நீரிழிவு நோயாளிகள் தினமும் உட்கொள்ளலாம்
பாதாம் உட்கொள்வதால் உணவு சாப்பிட்ட பிறகு திடீரென அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை சுலபமாக கட்டுக்குள் வைக்க முடியும்.
அக்ரூட் பருப்பு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் இதய நோய்கள், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை வராமல் தடுக்கின்றன.
அதிக அளவிலான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ள வேர்க்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவாக கருதப்படுகின்றது.
பூசணி விதைகளில் இரும்பு சத்தும் ஆரோக்கியமான கொழுப்பும் அதிகம் உள்ளன. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க பூசணி விதைகள் உதவும்
நார்ச்சத்து, புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பிஸ்தா இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.