ரத்த அழுத்தம் அதிகமானால், மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
சிட்ரஸ் பழங்களில் பிளவநாய்டுகள் அதிகம் இருப்பதால், ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகளாக செயல்பட்டு ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மை கொண்ட பீட்ரூட்டை வழக்கமாக சேர்த்துக் கொள்வதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட முழு தானியங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சிறந்த உணவுகள்.
ஆரோக்கியமான கொழுப்பு அமிலம் நிறைந்த உலர் பழங்கள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் பெற்றவை.
மீன் உணவுகள் குறிப்பாக சால்மன் மீன்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்தவை. இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.