பொதுவாகவே கேரட் சத்தான உணவாக பார்க்கப்படுகிறது. இவரில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கேரட்டை பச்சையாகவோ, சமைத்ததாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ குடிக்கலாம்.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் ஆரோக்கியமான பார்வைக்கு அவசியம்.
கேரட்டில் உள்ள வைட்டமின் சி வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உடலுக்கு தருகிறது.
நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் இருக்க வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது கேரட்.
தினசரி உணவில் கேரட்டை சேர்த்துக்கொள்வது இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவும்.
கேரட் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது மற்றும் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
கேரட் மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
கேரட்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.