நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்லாமல் அனைவருக்குமே உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை காலை உணவும் காலை வேளையில் நாம் செய்யும் செயல்களும் மிக முக்கியமானவை.
நாள் முழுதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க காலை உணவிலும் அதன் பிறகும் நீரிழிவு நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகளை பற்றி இங்கே காணலாம்.
கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிக அவசியம். ஆகையால் காலையில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும். சர்க்கரை இல்லாத பழச்சாறுகளும் நன்மை பயக்கும்.
காலை உணவில் குறைந்த க்ளைசெமிக் கூறியிடு (ஜிஐ) உள்ள உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். இது நாள் முழுதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
காலையில் உட்கொள்ளும் உணவில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாகவும் புரதச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின்கள் அதிகமாகவும் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
காலையில் செய்யப்படும் உடற்பயிற்சி கலோரிகளை வேகமாக எரிக்க உதவுவதுடன், இன்சுலின் சென்சிடிவிடியை மேம்படுத்த உதவுகின்றது. மேலும் காலையில் செய்யப்படும் யோகா, நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி ஆகியவை நாள் முழுதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் கண்டிப்பாக தினமும் காலையில் இரத்த சர்க்கரை அளவை செக் செய்வது அவசியமாகும். இது நாள் முழுதும் சர்க்கரை அளவை கண்காணிக்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.