சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும் சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலையில் எழுந்தவுடன் பாகற்காய் ஜூஸ் குடிப்பது நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
வைட்டமின் சி, ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் அதிகமாக உள்ள நெல்லிக்காய் சாற்றை குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
உடலின் உணர்திறனை மேம்படுத்த இது உதவுகிறது. எனினும் இதை முதலில் சிறிய அளவுகளில் குடித்துப்பார்ப்பது நல்லது.
வெந்தயத்தை இரவு முழுதும் ஊறவைத்து காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மஞ்சளில் உள்ள குர்குமின்னில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இரத்த சர்க்கரை அளவை சீர் செய்யும் பண்புகளும் உள்ளன.
இஞ்சியில் உள்ள ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுகர் லெவலை கட்டுப்படுத்த உதவும்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் இலவங்கப்பட்டை நீர் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.