சில வகை பாம்புகள் பல மாதங்களுக்கு சாப்பிடாமல் உயிருடன் இருக்கும். மெதுவான வளர்ச்சிதை மாற்றம், அதிக அளவிலான உணவை உண்ணும் திறன் ஆகியவை இதற்கு காரணம்.
முதலைகள் நீண்ட நாட்களுக்கு உணவில்லாமல் உயிர்வாழும் திறன் பெற்றது. ஆற்றலை சேமிக்கும் திறன், மிக மெதுவான வளர்ச்சிதை மாற்றம் ஆகியவை இதற்கு காரணம்.
பாலைவன ஆமைகள் மிகவும் வெப்பமான சூழ்நிலையில், மிகக் குறைந்த உணவை உண்டு நீண்ட நாட்களுக்கு தண்ணீர் உணவு இல்லாமல் வாழும் திறன் பெற்றது.
குளிர் காலத்தில் உறக்க நிலைக்குச் செல்லும் கரடிகள், உணவு தண்ணீர் இல்லாமல் நீண்ட நாட்கள் உயிர் வாழும்.
ஒட்டகம் தன் முதுகில் கொழுப்பையும் தண்ணீரையும் சேர்த்துக் கொண்டு, அதிலிருந்து ஆற்றலை எடுத்துக் கொண்டு வாரக்கணக்கில் உணவில்லாமல் உயிர் வாழும்.
கடுமையான பனியிலும் உன் தவளைகள் மர தவளைகள் உணவின்றி உயிர் வாழும் திறன் பற்றவை. குளிர்காலத்தில் இதன் இதயத்துடிப்பும், சுவாசமும் கூட மிகக் குறைந்த அளவே இருக்கும்.
தேனீக்கள் குளிர் காலத்தில் உணவின்றி வாழும் திறன் பற்றவை. உடலில் சேமிக்கப்பட்ட ஆற்றலை இவை பயன்படுத்தும்.