கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் மார்டைப்பு, பக்கவாதம், இதய கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சில இயற்கையான எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நார்ச்சத்து மற்றும் இன்னும் பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்த தக்காளி உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.
நெல்லிக்காய் ஆரோக்கியத்தின் களஞ்சியமாக கருதப்படுகின்றது. இதில் அதிக அளவு ஆண்டி-ஆக்சிடெண்டுகளும் வைட்டமின் சி -யும் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் மூன்று பூண்டு பற்களை போட்டு அதில் தேன் கலந்து குடித்து வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
மஞ்சள் பால் பல வித ஆரோக்கிய நன்மகள் அடங்கிய ஒரு பானமாகும். காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் பொடி கலந்த பால் குடிப்பதால் கெட்ட கொழுப்பை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
தினமும் காலையில் இஞ்சி தண்ணீரில் எலுமிச்சை சாறு ஆலந்து குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.