ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஜிபிஎஃப் வழங்கல் குறித்த மத்திய அரசின் புதுப்பித்தலில் உள்ள சில முக்கிய குறிப்புகளை இங்கே காணலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவை) விதிகள், 1960 இன் விதி 34 இன் படி, ஒரு ஊழியர் ஓய்வு பெற்றவுடன் ஜிபிஎஃப் தொகை (GPF Amount) உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வது கணக்கு அதிகாரியின் கடமையாகும்.
ஜிபிஎஃப் இருப்பு (GPF Balance) ஓய்வு பெற்ற பணியாளருக்கு மட்டுமே சொந்தமானது. ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தால், அதன் காரணமாக ஜிபிஎஃப் வழங்கலை தாமதப்படுத்த முடியாது.
விதி 11(4) -இன் படி, ஓய்வு பெற்றவுடன் GPF இருப்புத் தொகை செலுத்தப்படாவிட்டால், ஓய்வூதியத் தேதிக்கு அப்பாற்பட்ட காலத்திற்கு வட்டி வழங்க வேண்டும்.
பணியாளர் ஓய்வுக்கு பிறகு ஜிபிஎஃப் தொகையை அளிக்க ஆறு மாதங்கள் வரை ஏற்படும் தாமதத்திற்கு அளிக்கபப்டும் வட்டிக்கு ஊதியம் மற்றும் கணக்கு அலுவலகம் (PAO) ஒப்புதல் அளிக்கலாம்.
ஆறு மாதங்களுக்கும் மேலான தாமதங்களுக்கு, கணக்கு அலுவலகத் தலைவரின் ஒப்புதல் தேவை. ஒரு வருடத்திற்கு மேலான தாமதங்களுக்கு கணக்குக் கட்டுப்பாட்டாளர் அல்லது நிதி ஆலோசகரின் அங்கீகாரம் தேவை.
தாமதங்களைத் தடுக்கவும், வட்டிச் செலவைக் குறைக்கவும், சரியான நேரத்தில் ஜிபிஎஃப் தொகை பட்டுவாடா செய்யப்படுவதை உறுதி செய்யவும், GPF கட்டணச் செயல்முறை முழுவதற்கும் செயலாளர் தெளிவான பொறுப்புகளை வழங்குவார்.