யூரிக் அமில அளவு அதிகமானால், மூட்டு வலி, எலும்புகளின் பலவீனம், சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில ஆரோக்கியமான எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வைட்டமின் சி அதிகமாக உள்ள கொய்யாப்பழம் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தும். இது நீரிழிவு நோயை கடுப்படுத்தவும் உதவும்.
ப்ரோக்கோலி, பாலக் கீரை, வெந்தய கீரை போன்ற பச்சை காய்கறிகள், யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றன. இவற்றால் இன்னும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், யூரிக் அமிலம் கட்டுக்குள் இருக்கும்.
தினமும் ஒரு ஆப்பிள் உட்கொள்வதால், யூரிக் அமில அளவு கட்டுக்குள் இருப்பதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
தயிரில் உள்ள ப்ரோபயாடிக்குகள் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன. இவை யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.