ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?
மூளை சுறுசுறுப்பாக இருந்தால் தான் ஞாபக சக்தியும் நன்றாக இருக்கும்
ஞாபக சக்தியை அதிகரிக்க காலை மாலை என இருவேளைகளிலும் உடற்பயிற்சி அவசியம்
தியானம், யோகா ஆகியவற்றை தவறாமல் பயிற்சி செய்து மனதை ஒருமுகப்படுத்துங்கள்
தினமும் படுகைக்கு முன்பு அன்றைய நாள் நடந்த விஷயங்களை ஒருமுறை திரும்ப ஞாபகப்படுத்துங்கள்
அதில் முக்கியமானவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள ஏதாவது ஒரு குறிப்பை சேர்த்து மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்
படித்தவை ஞாபகம் இருக்க வேண்டும் என்றால் ஒருமுறைக்கு இருமுறை திரும்ப திரும்ப படிக்கவும்
அதனை இன்னொரு விஷயத்துடன் ஒப்பீடு செய்து குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரே விஷயத்தின் மூலம் இரு விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்
மனதை சோர்வாக்கும் எந்த விஷயங்களையும் நீங்கள் செய்ய வேண்டாம்.
உணவு, உடை ஆகியவற்றை கவனம் செலுத்தி உங்களை சுறுசுறுப்பாகவும், இயல்பாகவும் வைத்துக் கொள்ளுங்கள்
தொடர்ச்சியாக இந்த பழக்கத்தை பின்பற்றினால் நம்பிக்கை அதிகரித்து ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.