இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) கணக்கில் 8.25% ஆண்டு வட்டித் தொகையை டெபாசிட் செய்யும் செயல்முறை தொடங்கிவிட்டது. இபிஎஃப் சந்தாதாரர்கள் நீண்ட நாட்களாக இந்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறார்கள்.
வட்டித் தொகையை டெபாசிட் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைத்து கணக்குகளிலும் அது வரவு வைக்கப்படும் என்றும் EPFO தெரிவித்துள்ளது. இந்த செயல்முறை முடிந்த பிறகு, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) முழு வட்டித் தொகையையும் காண முடியும்.
சில எளிய வழிகளில் இபிஎஃப் கணக்கில் உள்ள இபிஎஃப் இருப்பை (EPF Balance) செக் செய்யலாம், அவற்றை பற்றி இங்கே காணலான்.
இபிஎஃப்ஓ -வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (EPFO Website) சென்று பிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் தொகையை செக் செய்யலாம்.
பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் போன்களில் உமங் செயலி (UMANG App) மூலமும் பிஎஃப் இருப்பை செக் செய்யலாம்.
011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் (Missed Call) கொடுத்தும் பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கு இருப்பை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG (தமிழுக்கு EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும்) என்று எழுதி SMS அனுப்பியும், பிஎஃப் தொகை பற்றிய தகவலை பெற முடியும்.
இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு EPFO -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.