உலக அளவில் நீரிழிவு நோய் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகின்றது
நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளக் கூடிய குறைந்த கிளைசெமிக் குறியீடு (Glycemin Index) உள்ள உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிக நார்ச்சத்து மற்றும் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆப்பிள் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கும்
இதன் ஜிஐ 55. இது திடீரென அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள பார்லி தண்ணீர் எதிர்பாராத இரத்த சர்க்கரை அதிகரிப்பை தடுக்க உதவும்.
இதன் ஜிஐ 28. இதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகப்படியான புரதச்சத்தும் நார்ச்சத்தும் கிடைக்கும், இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.
கேரட்டின் ஜிஐ ஸ்கோர் 39. பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ள கேரட் நீரிழிவு நோயாளிகளின் டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு காயாகும்.