வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இவை யூரிக் அமிலத்தை குறைக்க உதவும்.
செர்ரி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள அந்தோசயினின் உள்ளதால், இவை உடலில் இருக்கும் யூரிக் அமிலம் அளவை குறைக்க உதவும்.
குறைந்த கொழுப்புள்ள பாலில் இருக்கும் புரதங்கள் யூரிக் அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவும்.
அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை உறிஞ்சி, கீல்வாதத்தின் அபாயத்தை பெருமளவு குறைக்க உதவும்.
கிரீன் டீ இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவும். அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கீல்வாதத்தில் இருந்து எதிர்த்துப் போராட உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ளதால், இவை உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும்.
ப்ரோக்கோலியில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளதால், இவை உடலில் இருக்கும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும்.