நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோயை குறைக்க குடிக்க வேண்டிய பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
பாகற்காய் சாறில் உள்ள மருத்துவ குணங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை அளிக்கும். இது இன்சுலின் அளவுகளை சீர் செய்வதோடு இரத்த சர்க்கரை அளவை வெகுவாக குறைக்கின்றது.
வெந்தயம் நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளால் நிறைந்துள்ளது. இரவு வெந்தயத்தை ஊற வைத்து காலையில் இதன் நீரை குடித்து வந்தால், சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் ஆண்டி-ஆக்சிடெண்ட் நிறைந்த இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால், நீரிழிவு நோயாளிகளின் சுகர் லெவல் கட்டுப்படுவதோடு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
மஞ்சளில் உள்ள குர்குமின் சுகர் அளவை குறைப்பதில் உதவுகின்றது. இது இன்சுலின் சென்சிடிவிடியை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. தினமும் காலையில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் சுகர் நோயாளிகளுக்கு உடலில் இரத்தசர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.