யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவும் சில உலர் பழங்கள் பற்றி இங்கே காணலாம்.
யூரிக் அமிலத்தை குறைப்பது மட்டுமல்லாமல் முந்திரி, LDLகொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றது.
பொடாசியம் சத்து அதிகமாக உள்ள பேரீச்சம்பழத்தை உட்கொண்டால் யூரிக் அமில அளவை குறைக்கலாம்.
பாதாமில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் மாங்கனீஸ் இயற்கையாகவே யூரிக் அமில அளவை குறைக்கும்.
அக்ரூட் பருப்புகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இயற்கையான வழிகளில் யூரிக் அமில அளவை குறைக்க உதவுகின்றன.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ள ஆளி விதைகளை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமில அளவை எளிதாக குறைக்கலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.