கோடை காலத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது கடினமாகி விடுகின்றது. நீரிழிவு நோயாளிகள் இந்த காலத்தில் தங்கள் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வெயில் காலத்தில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கோடை காலத்தில் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கான ஒரு எளிய வழியாகும்.
வெயில் காலத்தில் அதிக சாறு கொண்ட பழங்களை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். தர்பூசணி பழம், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.
உணவில் கண்டிப்பாக பச்சை காய்கறிகளை சேர்க்க வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து சர்க்கர அளவை கட்டுக்குள் வைக்க உதவும்,
கோடை காலத்தில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவை சரியான நேரத்தில் உட்கொள்வது மிக அவசியமாகும்.
வெயில் அதிகமாக இருக்கும்போது, நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக வெளியில் செல்லக்கூடாது. இதனால் நீரிழப்பு ஏற்பட்டு இரத்த சர்க்கரை அளவு மற்றும் பிற பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.