ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரிக்கிறது. படிப்படியாக இது தொப்பையை உண்டாக்கும்.
கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரொக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழச்சாறு கலந்து குடிப்பது செரிமான அமைப்பை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சோம்பில் அஜீரணம் மற்றும் உப்பசத்தை அகற்ற உதவும் பண்புகள் உள்ளன. இதை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.
மஞ்சள் நீரில் குர்குமின் உள்ளது, இது உடலில் ஏற்படும் உப்பசத்தைக் குறைத்து எடையைக் குறைக்க உதவுகிறது.
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், தொப்பையை குறைக்கவும் எடை குறைக்கவும் உதவும்.
சீரக நீர் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
புதினா நீர் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. புதினா இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.