ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் கார்போஹைட்ரேட்கள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், சுகர் லெவலை கட்டுப்படுத்த இவை ஏற்றதாக கருதப்படுகின்றன.
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள கினோவா, பார்லி, பிரவுன் அரிசி போன்ற முழு தானியங்களை நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்க்க வேண்டும்.
ஆண்டிஆக்சிடெண்டுகள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகைகளில் பிற பழங்களை காட்டிலும் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது.
சால்மன் போன்ற கொழுப்பு மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி வீக்கத்தை குறைக்கின்றன.
பாதாம், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள், ஆளிவிதைகள் ஆகியவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு, புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.
மசாலாக்களில் இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அதிக ஆற்றல் படைத்ததாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு பழங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதோடு, கார்ட்சால் அளவுகளை குறைத்து, மன அழுத்தத்தில் நிவாரணம் அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.