வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உடல் எடையை குறைக்கவும் குறைந்த கலோரி பானங்களை காலையில் குடிப்பது மிகவும் உதவும்.
எலுமிச்சை ஜூஸ் செரிமானத்தை தூண்டி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி நிறைந்த பானம்.
தொப்பை கொழுப்பை எரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ள இளநீர் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலைக்கு உதவுகிறது.
எடை இழப்புக்கான குறைவான கலோரி கொண்ட சிறந்த பானமான நீர் மோர் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கிறது.
வெள்ளரி மற்றும் எலுமிச்சை அல்லது இஞ்சி கலந்த பானம் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய கலோரிகள் குறைவாக உள்ள சிறந்த பானம்.
கிரீன் டீயில் கொழுப்பைக் குறைக்க உதவும் கேடசின்கள் என்ற ஆக்ஸிஜனேற்றம் உள்ள நிலையில், மெட்டபாலிஸத்தை அதிகரிக்கவும், எடை குறைக்கவும் உதவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.