சுகர் நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உட்கொள்ள வேண்டிய சிறந்த காலை உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நீரிழிவு நோயாளிகள் காலையில் உட்கொள்ள வேண்டும். ஓட்ஸ், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
சுகர் அளவை குறைப்பதில் பார்லி உதவும். சுகர் நோயாளிகள் பார்லி உட்கொள்வதால் காலை வேளையில் சுகர் லெவலில் ஏற்படும் திடீர் அதிகரிப்பை தடுக்கலாம்.
காலை உணவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் உள்ள மேக்ரோநியூட்ரியண்ட்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்கின்றன.
காலை உணவில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) உள்ள பழங்களை சாப்பிட வேண்டும். ஸ்ட்ராபெரி, ராஸ்பெர்ரி, புளுபெர்ரி போன்ற பெர்ரிகளும், ஆப்பிள், பப்பாளி, பேரிக்காய் போன்றவையும் இதில் அடங்கும்.
நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க நீரேற்றத்துடன் இருப்பது அவசியம். இதற்கு காலை வேளையில் வெந்தய நீர், சீரக நீர், சோம்பு நீர் போன்ற சில டிடாக்ஸ் தண்ணீரை குடிப்பது உடலின் உள் அமைப்புகளை சுத்தப்படுத்த உதவும்.
ப்ரோக்கோலி, பீன்ஸ் போன்ற பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை கொண்ட சாலட்டை காலை உணவில் உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். இதில் கார்போஹைட்ரேட் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.