உடல் பருமன், தொப்பை கொழுப்பு (Belly Fat), உடல் உப்பசம் ஆகியவை பலரை பாடாய் படுத்துகின்றன. இவை இன்னும் பல நோய்களுக்கும் காரணமாகின்றன.
உடல் பருமனாக உள்ளவர்கள் காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது சத்தான உணவாகவும், கலோரிகளை அதிகரிக்காத உணவாகவும் இருக்க வேண்டும். அப்படி சில உணவுகளை பற்றி இங்கே காணலாம்.
காலை உணவாக ஓட்ஸ் உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுவதுடன் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கவும் உதவும். இதில் நார்ச்சத்தும் புரதச்சத்தும் அதிகமாக உள்ளன.
முளைகட்டிய பயறு வகைகளில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவற்றை காலை உணவாக உட்கொள்வதால் நமக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.
பல வகையான காய்கறிகள் அடங்கிய சாலட் சாப்பிடுவது தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இது கலோரி அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
காலை உணவாக தயிர் சாப்பிடுவதால் எடை இழப்பு தவிர இன்னும் பல வித நன்மைகள் கிடைக்கின்றன. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து எடை இழப்பில் உதவுகின்றன. தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறைய வாய்ப்புள்ளது.
முட்டை புரதம் நிறைந்த உணவு. இது வைட்டமின் பி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது, இது ஆரோக்கியமான வழியில் எடை இழப்புக்கு உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.