அதிக உடற்பயிற்சி சில சமயங்களில் முழங்காலில் அதிக எடையை போட்டு மூட்டுவலிக்கு வழிவகுக்கும்.
முழங்கால்களில் ஏற்படும் மூட்டுவலி தாங்க முடியாத வலியாக இருக்கலாம். ஆனால் சில பயிற்சிகள் முழங்கால் வலியை குறைக்க உதவும்.
முழங்காலை நீட்டி (Knee Stretches) மடக்குவது மூட்டுகளின் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மைக்கு உதவுகிறது.
Half Squats செய்வது ஆடுசதை, தொடை மற்றும் முழங்கால்களுக்கு நல்லது.
பாதத்தை தூக்கி ஆடுசதையை பகுதியை உயர்த்தி நிற்பது ஆடுசதையை வலுப்படுத்தவும், இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கால்களை உயர்த்தி (Leg Raise) அந்த நிலையிலேயே வைத்து பயிற்சி செய்வது முழங்கால்களுக்கு ஒரு பயனுள்ள பயிற்சியாகும். இது க்வாட்ரிசெப்ஸ் மற்றும் இடுப்பு பகுதிக்கு வலுவளிக்கிறது.
தொடைகளின் வலிமையை உருவாக்கவும், முழங்கால் வலியைக் குறைக்கவும் தொடை நீட்சி (Hamstring Stretching) முக்கியமானது.
ஆடுசதை மற்றும் குதிகால் நீட்சி (Calf and Heel Stretch) கீழ் காலில் தசைகளை திடமாக்கி முழங்கால்களில் வலியைக் குறைக்கிறது