பீட்ரூட் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளது என்பதிற்கு மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முதல், உடல் எடையை குறைப்பது வரை, இதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
எனினும், சில குறிப்பிட்ட உடல்நல பிரச்சினைகள் இருந்தால் பீட்ரூட்டில் இருந்து விலகி இருப்பது நல்லது.
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நோயாளிகள் பீட்ரூட்டை அதிக அளவு எடுத்துக் கொள்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்
சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் பீட்ரூட்டை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், பீட்ரூட்டை அளவோடு சாப்பிட வேண்டும்.
கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களும், மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அதற்கு ஏற்றபடி பீட்ரூட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.