கடந்த சில தசாப்தங்களாக பாமாயிலின் நுகர்வு மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது, ஆனால், இது ஆரோக்கியத்திற்கும் சமூகத்திற்கும் பல தீங்குகளை ஏற்படுத்துகிறது
பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாமாயில் ஆகும்
உணவில் இருந்து அழகுசாதனப் பொருட்கள் வரை அனைத்திலும் பாமாயில் பயன்படுத்தப்படுகிறது, அதன் தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்.
பாமாயிலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது, இது இரத்த ஓட்டத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அதிக எல்டிஎல் இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்துவதால் தான், பாமாயிலை பயன்படுத்துவதற்கு தடை சொல்லப்படுகிறது
வாழ்விட அழிவு, காடழிப்புமற்றும் வெப்பமண்டல பகுதிகளில் பல்லுயிர் இழப்பு ஆகியவற்றுக்கும் பாமாயில் உற்பத்திக்கும் தொடர்பு உண்டு. சுற்றுச்சூழல் சீரழிவு காலநிலை மாற்றத்திற்கு பங்களிப்பதால் பாமாயில் தயாரிப்புக்கு கண்டனங்கள் அதிகரிக்கின்றன
பாமாயில் மீண்டும் மீண்டும் சூடேற்றப்படும்போது கல்லீரல் திசுக்களின் சேதத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரலில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட சமையல் எண்ணெய்களின் விளைவுகள் மிகவும் மோசமானவை
பாமாயில் இரத்தம் உறைவதை மெதுவாக்கும். இரத்த உறைதலை மெதுவாக்கும் மருந்துகளை உண்பவர்கள், பாமாயிலை பயன்படுத்தவேக்கூடாது
பனை எண்ணெய் உற்பத்தியால், பல உள்ளூர் பழங்குடியினர் தங்கள் மூதாதையர் நிலங்களில் இருந்து இடம்பெயர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பாமாயில் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் மட்டுமல்ல, சமூக மற்றும் கலாசார தாக்கத்தையும் எதிர்மறையாக ஏற்படுத்துகிறது
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது