இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும்.
யுரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாத சில காய்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாலக் கீரையில் புரதம் மற்றும் ப்யூரின் இரண்டும் இருப்பதால், யூரிக் அமில நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது.
மழைக்காலத்தில் காய்ந்த உலர்ந்த பட்டாணி உட்கொள்வதால் யூரிக் அமில அளவு அதிகரிக்கும். இதில் ப்யூரின் அளவு அதிகமாக உள்ளது.
கத்திரிக்காய் அதிகம் உட்கொள்வதால் யூரிக் அமில நோயாளிகளுக்கு உடலில் வீக்கம் அதிகரிப்பதோடு முகத்தில் அரிப்பும் அதிகமாகும்.
பீன்ஸ் சாப்பிடுவதால் சிலருக்கு யூரிக் அமில அளவு அதிகரிப்பதுண்டு. ஆகையால் யூரிக் அமில நோயாளிகள் பீன்ஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
யூரிக் அமில நோயாளிகள் காளானை அதிகம் உட்கொள்ளக்கூடாது. இதனால் யூரிக் அமில அளவு அதிகரிப்பதோடு மூட்டு வலியும் அதிகமாகும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.