4 கைகளுடன், உடலின் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டதாக விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் இருந்தது
விஷ்ணுவின் இரண்டாம் அவதாரம் ஆமையாக எடுத்த அவதாரம் ஆகும்
பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை அழிக்க பன்றி அவதாரம் எடுத்த விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்
சிங்க முகத்துடன் மனித உடம்போடு விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரம், பக்தர்களைத் காக்கும் எடுத்த அவதாரம் ஆகும்
மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து, தானம் கேட்டு, அவரை வதை செய்ய வாமன அவதாரம் எடுத்தார் விஷ்ணு
பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைக் கூண்டோடு அழிக்க, சபதமேற்ற பரசுராம அவதாரம்
அயோத்தியில் ராமராக பிறந்து, ராவணனை அழித்த அவதாரம்
கிருஷ்ணரின் அண்ணனாக பலராம அவதாரம்
கார்மேக கண்ணனாக கிருஷ்ணாவதாரம் எடுத்த கிருஷ்ணனின் அவதாரம்
இந்த அவதாரம் எப்போது என வைணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கலி யுகத்தில் தோன்றி தீமைகளை அழிப்பார் விஷ்ணு என்பது நம்பிக்கை.